TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


ஆதார் கார்டுக்கு பதிவு செய்ய விண்ணப்பம்... : கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை அ


கடலூர்: கடலூரில் நகராட்சி அலுவலக ஊழியர்களின் அலட்சியத்தால், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் ஜெராக்ஸ் கடையில் விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கடந்த 2011ம் ஆண்டு எடுத்த தேசிய மக்கள் தொகை அடிப்படையில் பொதுமக்களுக்கு ஒவ்வொருவரின் விரல் ரேகை, கருவிழி பதிவுடன், புகைப்படத்துடன் கூடிய ஆதார் அடையாள அட்டை வழங்கி வருகிறது. துவக்கத்தில் ஆதார் கார்டு பெற மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய மத்திய அரசு, அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கார்டு எண் குறிப்பிட வலியுறுத்தி வருகிறது. இதனால், தற்போது ஆதார் கார்டு எடுப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மாநில குடியுரிமைப் பதிவு இயக்குனரகத்தால் தாலுகா மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், கடந்த 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து, புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்களுக்கு மட்டுமே தற்போது புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், இதுவரை தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யாதவர்கள், ஆதார் கார்டு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனை அறிந்த மத்திய அரசு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஏற்கனவே பதிவு செய்யாமல் விடுபட்டவர்களுக்கு புதிதாக விண்ணப்பங்கள் கொடுத்து, அதனை பூர்த்தி செய்து வாங்கி, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்த பின், புகைப்படம் எடுத்து ஆதார் கார்டு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக அனைத்து மையங்களுக்கும் உரிய விண்ணப்பங்களை வழங்கியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு தாலுகா அலுவலகங்களிலும், நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி அலுவலகங்களில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்தந்த நகராட்சி அலுவலகத்திலும், கிராம மற்றும் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., மூலம் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.அதன்படி, கடலூர் நகராட்சியைச் சேர்ந்த 31 முதல் 45வது வார்டுகளில், இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கு நேற்று (4ம் தேதி) முதல் நாளை (6ம் தேதி) வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 15 வார்டுகளைச் சேர்ந்த பலர், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பெற 200க்கும் மேற்பட்டோர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் கூடினர். ஆனால், அங்கிருந்த ஊழியர்களோ, விண்ணப்பம் ஏற்கனவே தீர்ந்து விட்டது. அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் விண்ணப்பம் விற்கிறது. அதனை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறினர். மக்களும் வேறு வழியின்றி ஜெராக்ஸ் கடையில் 6 ரூபாய் கொடுத்து விண்ணப்பம் வாங்கினர். அந்த விண்ணப்பங்களை, நகராட்சி அலுவலக வளாகத்திலேயே 10க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பூர்த்தி செய்து கொடுத்தனர். விண்ணப்பம் பூர்த்தி செய்ய ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலித்தனர்.

இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, 2,000 விண்ணப்பம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அது முதல் 15 வார்டுகளுக்கே போதவில்லை. கூடுதல் விண்ணப்பம் கேட்டுள்ளோம். அதுவர தாமதமாவதால், மக்களை வீணாக அலைய விட வேண்டாம் என்பதற்காக, ஜெராக்ஸ் கடையில் விற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தனர்.

footer