TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


உலகக் கோப்பை கிரிக்கெட்


உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50-வது ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டகாரர் கோயட்சர் அபாரமாக ஆடி 156 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்கு 319 ரன்கள் தேவை என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், சவும்யா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர். சர்க்கார் 2 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் களமிறங்கிய மகமதுல்லா, தமிம் இக்பாலுடன் கைகோர்த்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.

footer