TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


டில்லி குடியரசு தின விழா: துவங்கியது


புதுடில்லி : டில்லி குடியரசுதின இன்று காலை மழை காரணமாக சற்று தாமதமாக துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர்பாரிக்கர் முதல் நபராக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பிரதமர் மோடி 9 கார்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். அவர் அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டருந்த குறிப்பேட்டில் தனது உணர்வை எழுதினார்.தொடர்ந்து குடியரசு தின விழா நடக்கும் மேடைக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

தேசிய கொடிக்கு மரியாதை : ராணுவ அணிவகுப்பு நடக்கும் விழா மேடைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வந்தார். அவருடன் மனைவி மிக்செல் மனைவியும் வந்தார். அவரை பிரதமர் மோடி வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் அவர் அங்கு இருந்த மத்திய அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து சரியாக காாலை 10 மணிக்கு குதிரைப்படை அணிவகுக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைத்து வரப்பட்டார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.


காலை 10.05 க்கு ஜனாதிபதி தேசிய கொடியேற்றி வைத்தார். இந்நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர்மோடி , சிறப்பு விருந்தினர் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் எழுந்து நின்று சல்யூட் அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

footer