TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


தி.மு.க.,வில் புதிதாக ஐந்து அமைப்புகள்


தி.மு.க.,வில், அதிருப்தியாக இருக்கும் பலரை சமாளிக்க, புதிதாக ஐந்து துணை அமைப்புகளை துவக்க, கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டமிட்டு உள்ளார்.

தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தல் மூலம், 63 மாவட்ட செயலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.அதனால், ஸ்டாலின் அணிக்கு எதிராக இருக்கும் பலர், அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுக்க, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி முற்பட்டுள்ளார். சிலர், பா.ஜ.,வுக்கு தாவவும் திட்டமிட்டு உள்ளனர். அனைத்து மாவட்ட தி.மு.க.,விலும் இந்த நிலைமை உள்ளது.அதனால், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி, அவர்களை கட்சியிலேயே நீடிக்க வைக்க, கருணாநிதி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், இணையதள பிரசாரம், பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதனால், தி.மு.க.,விலும் இணையதள அணி ஒன்றை ஏற்படுத்த, கருணாநிதி திட்டமிட்டுள்ளார். அந்த அணியினர் மூலம் இணையதள பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளார். அதேபோல், பெண்களின் ஓட்டுகளை கவர சுயஉதவிக் குழு அணி, தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளைக் கவர வர்த்தக அணி, தொழிலாளர்களை கவர அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணி மற்றும் ஓட்டுனர்கள் அணி போன்றவற்றையும் உருவாக்க தீர்மானித்துள்ளார்.இந்த அணிகளுக்கு பொறுப்பாளர்களாக, கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

footer