TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


சென்னை டெல்லி நகரங்களுக்கிடையே புல்லட் ரயில்?!


இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் டெல்லிக்கு இடையே உள்ள தொலைவு சுமார் 1755கிலோ மீட்டர்கள். இந்த தொலைவினை ஆறு மணிநேரத்தில் கடக்கும் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்துவது சாத்தியமா என்பதற்கான ஆய்வுப்பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கின்றன. சீனாவின் பெய்ஜிங் மற்றும் குவான்கூ நகரங்களுக்கு இடையே உலகிலேயே நீண்டதூர அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படுகின்றது.. எனவே இத்திட்டத்தில் இந்திய சீன நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்படக்கூடும் என்றும் ரயில்வேதுறை உயர் அதிகாரிகள் இதுகுறித்தான ஆய்வுகளுக்காக சீனா செல்வார்கள் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

footer