TamilKushi.com Login and Register
Register
Notice: Undefined index: FBID in /home/tamilkus/public_html/header1.php on line 81

Latest News


சுதந்திர தாகத்தில் ஸ்காட்லாந்து தேசம்.


ஏறத்தாழ 300 ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆளுமையில் இருந்துவந்த ஸ்காட்லாந்து தனிதேசமாக உருவெடுக்கும் கனவு கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டைதீட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் தனிதேசமாக ஸ்காட்லாந்து பிரியவேண்டுமா கூடாதா.. என்று மக்கள் கருத்துக்களை அறியும் விதமாக அரசியல் விவாதங்களைக் கடந்து கருத்துக்களறியும் வாக்கெடுப்பை பிரிட்டிஷ் ஒருமனதாக செயல்படுத்தி இருக்கின்றது. 97% மக்கள் வாக்களிக்க பதிவு செய்திருக்கும் இந்த நாள் பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாகவும் அமைகின்றது. 17 வயது நிரம்பியவர்களுக்கு முதன்முறையாக வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டிருக்கும் தேர்தலும் இதுவே. ஸ்காட்லாந்தின் திக் திக் நிமிடங்கள் தொடர்கின்றன.

footer